காற்று வெளியிடை ட்ரைலர் வெளியீட்டை முன்னிட்டு “What can be bigger and better than #Kaatru Veliyidai trailer being launched by A.R. Rahman? ” என்றொரு கேள்வியெழுப்பி “any guesses? என்று  Madras Talkies page-ல் கேட்டிருந்தார்கள். அந்த “bigger&better”லேயே ரஹ்மானோடு இணைந்து மணிரத்னமும் வெளியிடப்போகிறார் என்பது தெரிந்துவிட்டது.

Live session தொடங்கியதும் Close-Upல் ‘வான் வருவான்’ இசையோடு ரஹ்மானின் விரல்களும், கருப்புவெள்ளை இசைக்கட்டைகளும் தெரிந்தன. அந்த விரல்கள் தான் கடந்த 25 ஆண்டுகளாக மணிரத்னத்திற்கு சின்ன சின்ன ஆசை,நெஞ்சினிலே, கண்ணாளனே, ஸ்நேகிதனே தொடங்கி வான் வருவான் வரை உருவாக்கிக் கொடுத்திருக்கிறது.

“சுட்டும் விழிச்சுடர் தான் கண்ணம்மா” என்று பாரதியின் வரிகளைப்போல அந்த ஒரு காட்சிக்கு “சுட்டும்விரல் படர்ந்தால் கண்ணம்மா இன்னிசை தந்திரரோ” என்று எழுதிவிடலாம். அது தொடரும் “வட்டக் கரிய விழி” தான் கருவிழி சுமக்கும் பியானோவாகத் தெரிந்தது. அந்த விரல்கள் சுட்டிய இசைக்குறிப்புகள் இன்றவளில் காற்று வெளியெங்கும் பேரானந்தமாக நிறைந்து நிற்கின்றன.

மௌனமாக தொடங்கிய உரையாடலில் அவர்களது 25 வருட பயணத்தைப் பற்றிய சிலாகிப்புகளைக் கேட்க கேட்க பார்க்க பார்க்க மகிழ்ச்சியின் உச்சநிலைக்கு சென்றது போன்ற உள்ளுணர்வு. சட்டென “Can You play?” என்று மணிரத்னம் கேட்டதும் ரஹ்மானின் முகமலர்ச்சியானது  அதற்குப்பிறகு அவர் இசைத்த சின்ன சின்ன ஆசையை விட ஒருபடி மேலிருந்தது. Goosebumps. ரஹ்மான் வாசித்து முடித்ததும் எத்தனையோ முறை அந்த விரல்களில் வாசித்துக் கேட்டிருந்தும் “still magicalல இது” என்று மணிரத்னம் சொல்லும்போது அவரது கண்களில் தெரிந்தது கர்வம் மட்டுமல்ல ரஹ்மானின் வெற்றியும் கூட. அந்த வெற்றியின் பிரதிபலிப்பு ” You are an inspiration, You works are my inspiration” என்ற ரஹ்மானின் வார்த்தைகளில் தெரிந்தது. அவர்கள் இப்படியெல்லாம் பேசிக்கொள்வது அவர்களுக்கு வேண்டுமானால் “nostalgic feel”-ஆக இருக்கலாம். ஆனால் அதை ரசிக்க ரசிக்க அதிலிருக்கும் அனுபவமும் ஆத்ம உணர்வும் குழந்தையின் சிறுமுதல் சிரிப்பைப் போன்றது எனக்கு.

ஒரு ட்ரைலரை சிலாகிப்பதை விட மூன்று நிமிட சம்பாஷணைகளை நினைத்து மகிழ்ச்சியில் திளைப்பதென்பது வார்த்தைகளால் விவரிக்க முடியாத உணர்வு.

ஒரே வரியில் சொல்ல வேண்டுமானால் இந்த trailer வழக்கமான மணிரத்ன visual magic. இத்தனைப் படங்களிலும் எந்த மாதிரி பூரிப்பைக் கொடுத்திருந்தாரோ அதுவே இந்த காட்சிகளிலும் பொருந்தி நிற்கிறது. மணிரத்னம் ரசிகர்களைத் தாண்டி பொது ரசிகர்கள் இதை ரசிக்காமல் இருக்கலாம். இவர் இந்த ட்ரைலரில் எந்த கதையும் சொல்லவில்லையென்றும் தோன்றலாம்.

 

தொடக்கத்தில் ‘மனசு மாறாதா’ என்று கேட்கிறான், அவள் மனசு மாறி  அவனோடு flightல் பயணிக்கிறாள்.
பனிமலை உச்சியில் நின்று காற்று வெளியிடை அவளது காதலை எண்ணிக் களிக்கிறான்.
கதவுக்கு இருபக்கத்திலும் நின்று ஒற்றைத்தலையணையோடு சிறு பிரிவு நிலை.
கொஞ்சம் ஏக்கங்கள். இறுதியில் காதலனின் தன்னிலை விளக்கம்.

முடிவை படத்தில் காணலாம் பொறுத்திருந்து.

கதை சொல்வது வேறு காட்சிப்படுத்துதல் வேறு. மணிரத்னம் இரண்டாம் வகை. காட்சிகளின் உணர்வுகளில் நம்மைப் பூட்டிவைப்பவர். இந்த ட்ரைலர் மொத்தமும் colourful காட்சிப்பேழை.

இதிலிருக்கும் இரண்டு வசனங்கள் கூட இதற்கு முன் வெளியிடப்பட்ட இரண்டு பாடல்களின் காட்சி நிலையே.

“மனசு மாறுச்சுன்னா.. Next Saturday. 5PM. flightல
“officerக்கு காது கேக்காதா”

“doctorக்கு மனசு மாறாதா”.

 

“அழகியே.. Marry me” பாடலின் மொத்த சாராம்சம் இது.
“நீ என்ன விரும்புறத விட
நான் உன்ன அதிகமா விரும்புவேன்
நீ என்ன வெறுத்தாலும் விரும்புவேன்
நீ என்ன விரும்பலனாலும் விரும்புவேன்”

இது “வான் வருவான்” பாடலில் காதலி தனது காதலனுக்கானதாக சொல்லும் குணாதிசியங்களுக்கு, அந்த காதலன் கொடுக்கும் expressive justification.

“என்னைத் துறவான்
என்பேர் மறவான்
என்னை மறந்தால்
தன்னுயிர் விடுவான்”

இந்த நான்கு வரிகளில் இருக்கும் காதலியின் நம்பிக்கையை உறுதிப்படுத்தும் காதலின் வார்த்தைகள் தான் அவை.

ட்ரைலரை வெளியிடுவதற்கு முன் மணிரத்னம் ரஹ்மானிடம் சொன்னது இது.
25 years, did u think?
Wow. its just, இப்பவும் first filmல உக்காந்து வேல செய்ற மாதிரி இருக்கு.
Good.. Great Rahman.. Fantastic.. Thank You so much. 

அதை நாங்கள் தான் சொல்ல வேண்டும் : Thank You மணிரத்னம் – AR ரஹ்மான்.. Of course வைரமுத்து.

PS: “என்னடா trailer-க்கு இவ்ளோ எழுதுறானே” என்று நினைக்க வேண்டாம். போஸ்டருக்கு கூட எழுதலாம்.

இளம்பரிதி கல்யாணகுமார்
09 March 2017
மஸ்கட்

Advertisements