அன்பே சிவம்

வேகமாய் பறக்கும் பறவையின் பறத்தலை நான் கொஞ்சம் மேகமாய் ரசிக்கிறேன். வானெங்கும் பொங்கும் மேகங்கள் தனித்திருப்பவையல்ல. நிறங்களில் மாறும் மேகத்திற்கு ஆறுதல் இந்த பறவைகள்  தான். மழை சுமந்து, வெயில் பொதிந்து ஊரெங்கும் நீந்தும் வான்மீன்கள் மேகங்கள்.

கையசைத்து அணைப்பதுபோல சிறகசைத்து செல்லும் பறவைளின் சம்பாஷணைகள் மேகத்திற்கு மட்டுமே புரியும்.
செய்தி சொல்லும் பறவைகளின் தூரங்கள் காற்றில் சூழ்ந்திருக்கும் கனவுகள்.

கீழிருந்து பார்ப்பவர்களுக்கு மேகமும் பறவையும் ஓரிடமென தெரியும். ஆனால் அவை வெளியளவில் தூரத்தில் இருக்கின்றன என்பது தான் நிதர்சனம். தூரங்கள் நிரப்பும் அன்பு அலாதியானது. கொஞ்சம் பரிசுத்தமானதும் கூட.

வாழ்வின் நெறிகளில் அன்பும் அரவணைப்பும் அப்படியே. மேகமென இருந்தால் பறவையென யாரேனும் இருப்பார்கள்.

அன்புடையார் எல்லாமுடையார்

post

Advertisements