Search

கண்ணாடித்திரை

கனவுகளின் ஊடுருவல்

அன்பே சிவம்

This is the post excerpt.

Advertisements
Featured post

காற்று வெளியிடை -நுழைவாயில்

காற்று வெளியிடை ட்ரைலர் வெளியீட்டை முன்னிட்டு "What can be bigger and better than #Kaatru Veliyidai trailer being launched by A.R. Rahman? " என்றொரு கேள்வியெழுப்பி "any guesses? என்று  Madras Talkies page-ல் கேட்டிருந்தார்கள். அந்த "bigger&better"லேயே ரஹ்மானோடு இணைந்து மணிரத்னமும் வெளியிடப்போகிறார் என்பது தெரிந்துவிட்டது. Live session... Continue Reading →

இது தான்டி “வைரமுத்து” பாணி

"சாரட்டு வண்டில" பாடலைக் கேட்டதும் "அதென்ன சாரட்டு- சீரட்டு" என்று நண்பர்கள் சிலர் கேட்டார்கள். சாரட்டு - chariot - இயல்பாக சொல்ல வேண்டுமானால் குதிரை வண்டி lyrical video-வில் இருந்த "saarattu vandila" என்பது "charattu vandila" என்று இருந்திருந்தால் அந்த கேள்வி எழுந்திருக்காது என்றே தோன்றுகிறது. அதனோடு பாடலின் உச்சரிப்பில் "ச்சாரட்டு" என்று... Continue Reading →

மணிரத்னத்தின் காதல்மொழி “சுஜாதா”

காதலின் அழகு அதை உணர்வதிலும் உணர்த்துவதிலும் தான் இருக்கிறது. காதலின் வெளிப்பாடுகளுக்கு இரண்டு முகங்கள் இருக்கின்றன. ஒன்று மௌனத்தில் ஓசைகளின்றி வெளிப்படுத்தும் நிசப்தமொழி மற்றொன்று இசைப்பின்னணியில் வார்த்தைகளில் வெளிப்படுத்தும் மணிரத்னமொழி. பெரும்பாலான சமயங்களில் அந்த மணிரத்ன மொழியின் இசை ரஹ்மானென்றால் அதன் வார்த்தைகள் சுஜாதா. இசைக்கு மூலமான இசைக்குறிப்புகள் போல காதலுக்கு வேண்டிய குறிப்புகள் சுஜாதாவின்... Continue Reading →

A FILM BY GAUTAM VASUDEV MENON

சினிமாவின் மொழியிலக்கியத்தை Realism, Magical Realism என்று சொல்லி கேட்டதுண்டு. நிதர்சனத்தைப் பொறுத்தவரையில் சினிமா என்பது Surrealism, which is something beyond the reality. அதனால் தான் கற்பனைக்கு மீறிய நிகழ்வுகளை சித்தரிக்கும்போது அதன் சுயத்தன்மையை சினிமாத்தனம் என்று கடக்கச் சொல்வார்கள். ஒரு திரையில் அசைவுகளற்ற தொனிக்குள் இயல்படும் காட்சிகளும் குரல்களும் நமது வாழ்க்கையை... Continue Reading →

ஹாரிஸ் ஜெயராஜ் – பிறந்தநாள் பதிவு

T.ராஜேந்தரின் பாடல் பதிவுக்கூடத்தின் சுவர்கள் இசையை மறந்து நிசப்தத்தை ரசித்துக்கொண்டிருந்த ஒரு மதிய உணவு இடைவேளை அது. ஒரு 18 வயது இளைஞன் மட்டும் எங்கும் செல்லாமல் தனது கீபோர்டில் எதையோ வாசித்துக்கொண்டிருந்தான். அங்கு கிட்டார் கலைஞராக பணியிலிருக்கும் தந்தைக்கு உணவு கொடுக்க அப்பொழுது அங்கு வந்த 10 வயது சிறுவனொருவன் அந்த இளைஞனின் பின்னால்... Continue Reading →

தள்ளிப்போகாதே

கண்ணதாசன், வாலி தொடங்கி வைரமுத்து என பெரும்பாலான தலைத் தமிழிசை கவிஞர்கள் அனைவரும் தங்களது பாடல்களில் சங்க இலக்கியத்தின் தாக்கத்தினை மொழிக்காதலின் தழுவலாக தழுவிக்கொண்டு நம்மிடம் கொண்டு வந்து சேர்த்திருக்கிறார்கள். வைரமுத்துவின் 'நறுமுகையே', வாலியின் 'முன்பே வா' என ஆங்காங்கே பல மேற்கோள்களை அடிக்கோடிட்டு அப்படிப்பட்ட தழுவல்களாக எத்தனையோ உதாரணங்களைச் சொல்லிக்கொண்டு போகலாம்.. ஆதிகால சங்கத்தமிழை... Continue Reading →

வான் – நானே வருவேன்

'வான்' என்ற இந்த இரண்டெழுத்து சொல் 'காற்று வெளியிடை' படத்தின் முதல் முன்னோட்டத்தின் மொத்த காட்சிகளிலும் ஆக்கிரமித்திருந்தது. வைரமுத்துவும் மணிரத்னமும் இணைந்தால் வானமும் வசப்படும் என்பதை உணர்த்த பரந்த ஆகாயத்தை இரண்டெழுத்தில் அடக்கி 'வான்' என்று எழுதியிருக்கிறார்கள். பாடல் வரிகள் முழுவதும் வான்மயம். வான் வருவான் தொடுவான் மழைபோல் விழுவான் மர்மம் அறிவான் இந்த வரிகளைப்... Continue Reading →

நில்லாயோ

கபாலி பாடல்கள் வெளியான சமயதில் அது வரையிலான சந்தோஷ் நாராயணனின் பாடல்களைக் குறிப்பிட்டு அவரின் இசை வளர்ச்சியைப் பற்றி ஒரு பதிவு எழுதியிருந்தேன். அதில் வந்த பின்னூட்டங்கள் அனைத்தும் அவரின் கன்சிஸ்டென்சியை கேள்வி கேட்பது போல அமைந்திருந்ததன. அதற்கு பதில் சொல்வது போல இந்த ஆண்டின் கபாலி, இறுதிச்சுற்று தவிர மற்ற அனைத்து ஆல்பங்களிலும் ஒன்றிரண்டு... Continue Reading →

இயல்-இசை-தமிழ் – 02

வைரமுத்துவின் இன்னுமொரு பொருளடக்கம் மனதுக்கு நெருக்கமான சில பாடல்களை அளவுக்கு அதிகமாக கேட்டுவிட்டதாக தோன்றிய பின்னர் கொஞ்சம் ஒதுக்கி வைத்துவிட்டு சில நாட்கள் கழித்து மீண்டும் கேட்கும்போது 'அட' என்ற ஒரு புதுவித அனுபவத்தைக் கொடுக்கும். பல நாட்கள் பழகியிருந்தய தோழியொருத்தி மணமுடித்துச்சென்றபின் வருடங்கள் கழிந்து ஒருநாள் தெருவிலோ ஏதேனும் கோவில் திருவிழாவிலோஅவளைக் காணும்போது பழைய... Continue Reading →

Blog at WordPress.com.

Up ↑